தமிழ்நாடு

“பகைக்கு வயது ஒன்று; பழிக்குப் பழி தொடரும்”:எச்சரிக்கும் போஸ்டரால் கலக்கத்தில் மதுரை மக்கள்-பின்னணி என்ன?

நண்பர்களை கொன்றவர்களை பழிக்குப்பழி வாங்கப்போவதாக போஸ்டர் மூலம் எச்சரித்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“பகைக்கு வயது ஒன்று; பழிக்குப் பழி தொடரும்”:எச்சரிக்கும் போஸ்டரால் கலக்கத்தில் மதுரை மக்கள்-பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தொழில்ரீதியான எதிரிகளை பழிவாங்க, எதிர்த் தரப்பினர் கூலிப்படை ஏவுவது, நேரடியாக இறங்கி தீர்த்துக்கட்டுவது போன்ற செயல்களையும், கொலை மிரட்டல் விடுப்பதையும், செய்திகளின் மூலமும், சினிமாவின் வழியாகவும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

தற்போது தமிழ் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு, மதுரையில் எதிரிகளுக்கு போஸ்டர் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் அனுப்பானடியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். இவர் மதுரை காமராசர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்துள்ளார். கடந்த ஆண்டு இவர் வசிக்கும் பகுதிக்கு அருகில் மோட்டார் வாகனத்தில் வேகமாகச் சென்றுள்ளார்.

அப்போது ஏற்பட்ட தகராறில், கடந்தாண்டு அக்டோபர் 18ம் தேதி பிரவீன் குமார் வெட்டிக் கொல்லப்பட்டார். அப்போது அந்த வழக்கில் 8பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்தாண்டு பிரவீன் குமாரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

“பகைக்கு வயது ஒன்று; பழிக்குப் பழி தொடரும்”:எச்சரிக்கும் போஸ்டரால் கலக்கத்தில் மதுரை மக்கள்-பின்னணி என்ன?

நினைவு தினத்திற்கு முந்தைய நாள் பிரவீன் குமாரின் நண்பர்கள் போஸ்டர் அடித்து மதுரை நகர் முழுவதும் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் மதுரை மக்களின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டர் ஒட்டப்பட்டதில் இருந்து மதுரைக்குள் பெரும் வன்முறை சம்பவம் நிகழ வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.

இவ்வளவு அச்சமூட்டும் வகையில் உள்ள அந்த போஸ்டரில், “சிந்திய ரத்தம் வீண் போகாது, எதிரியை வீழ்த்துவது உறுதி, பகைக்கு வயது ஒன்று, இரத்தம் சரிந்த நாள், பழிக்குப்பழி தொடரும்” போன்ற வாகங்கள் அவர்களது எதிரிகளை எச்சரிக்கும் வகையில் உள்ளன.

இந்த கும்பலில் உள்ள சிலர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களை பிடிக்க போலிஸார் முயற்சி செய்வதாகவும் கூறப்படுகிறது. இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories