தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திள்ளது.

தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரு நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையே, சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் காலை மழை பெய்து வருகிறது. அதேப்போல் புதுச்சேரியில் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்ததுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், க‌ன‌ம‌ழை கார‌ணாக‌ கொடைக்கான‌லில் இருந்து அடுக்க‌ம் வ‌ழியாக‌ செல்லும் பெரிய‌குள‌ம் சாலையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் ம‌ண் ச‌ரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவால் கொடைக்கானல் - பெரியகுளம் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீச வாய்ப்புள்ளதால், அடுத்த இரு நாட்களுக்கு மேற்கூறிய இடங்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

banner

Related Stories

Related Stories