தமிழ்நாடு

முதலீட்டுக்கு இரட்டிப்பு லாபம், வெளிநாடு சுற்றுலா என ஆசை காட்டி ரூ.100 கோடியை சுருட்டிய தம்பதி!

சேலத்தில் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து ரூ.100 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலிஸார் கைது செய்தனர்.

முதலீட்டுக்கு இரட்டிப்பு லாபம், வெளிநாடு சுற்றுலா என ஆசை காட்டி ரூ.100 கோடியை சுருட்டிய தம்பதி!
மணிகண்டன் | இந்துமதி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சேலம் மாவட்டம் சீலநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி இந்துமதி. இவர்கள் இருவரும் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஆர்.எம்.வி. குரூப் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்திவந்துள்ளனர்.

அந்த நிறுவனத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலரை இடைத்தரகர்களாக வேலைக்க அமர்த்தியுள்ளனர். பின்னர் தங்கள் நிறுவனத்தின் மீது முதலீடு செய்தால் 100 நாட்களில் பணத்தை இரட்டிப்பாக செய்து தருவதாகவும், நீண்ட நாள் முதலீட்டுக்கு 25 சதவீத வட்டி தருவதாகவும் கண்கவரும் விளம்பரங்கள் செய்துள்ளனர்.

மேலும், வாரியாக வினியோக உரிமை பெற்று தருவதாகவும், முதலீடு செய்வர்களை வெளிநாட்டுக்குச் சுற்றுலா அழைத்துச்செல்லவதாகவும் கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி, தன்னிடம் இருக்கும் பணத்தை, முதலீடு செய்பவர்கள் முன்னிலையில் அடுக்கி வைப்பதும், மேசையின் மீது கட்டுகட்டான பணத்துடன் புகைப்படம் எடுத்து அதனை பகிர்ந்து விளம்பரப்படுத்துவதுமாக இருந்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ஆசையில் அந்த நிறுவனத்தில் பல லட்சங்கள் முதலீடு செய்துள்ளனர். மேலும் பலரை நம்ப வைக்க மூதலீடு செய்தவர்களுக்கு சில சலுகையை மணிகண்டன் வழங்கியுள்ளார். பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என நம்பி ஓராண்டில் 350-க்கும் மேற்பட்டோர் சுமார் 23 கோடி வரை பணம் முதலீடு செய்துள்ளனர். ஆனால், முதலீடு செய்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

முதலீட்டுக்கு இரட்டிப்பு லாபம், வெளிநாடு சுற்றுலா என ஆசை காட்டி ரூ.100 கோடியை சுருட்டிய தம்பதி!

பின்னர் அடிக்கடி வெளிநாடு சென்றுவந்த தம்பதியினர் மீது முதலீட்டாளர் ஒருவர் சந்தேகம் அடைந்து சேலம் மாநகர போலிஸிடம் புகார் கொடுத்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் வழக்கை விசாரிக்கத் தொடங்கினர். இந்த சம்பவங்களில் ஈடுபட்ட மணிகண்டனின் நண்பர்களிடம் நடத்திய விசாரனையில் அவர்களின் மோசடி திட்டம் அம்பலம் ஆனது.

பின்னர் தூபாயில் இருந்து சுற்றுலா சொன்று விட்டு திரும்பி வந்த மணிகண்டன் மற்றும் இந்துமதியைப் போலிஸார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணயில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

பொதுமக்களை ஆசை காட்டி பெற்ற கோடிக்கணக்கான பணத்தில், அந்த தம்பதி துபாய், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிக முதலீட்டாளர்களை அழைத்து வந்த இடைத்தரகர்களையும், அவர்கள் வெளிநாடு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 13 செல்போன்கள், 2 சொகுசு கார்கள், பத்து பவுன் செயின், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் வழக்கு சம்பந்தமான போலி ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில், மணிகண்டன், இந்துமதி தம்பதிக்கு உதவியாக இருந்தவர்களை பிடிக்க போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

banner

Related Stories

Related Stories