தமிழ்நாடு

புரட்டாசி மாதம் நிறைவு... டல் அடித்த இறைச்சிக் கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்... (ஆல்பம்)

இதுநாள் வரை டல் அடித்துக் கொண்டிருந்த அசைவ விற்பனை புரட்டாசி முடிவுற்றதால் தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது.

புரட்டாசி மாதம் நிறைவு... டல் அடித்த இறைச்சிக் கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்... (ஆல்பம்)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோர் வீட்டிலும், வெளியிலும் அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்த்ததால், மீன், கோழி, ஆடு உள்ளிட்ட இறைச்சிகளை விற்பனை திண்டாட்டமானது.

புரட்டாசி மாதம் நிறைவு... டல் அடித்த இறைச்சிக் கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்... (ஆல்பம்)

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமையுடன் புரட்டாசி மாதம் நிறைவடைந்ததால் அசைவ பிரியர்கள் குஷியடைந்துள்ளனர். ஆகவே இன்று ஞாயிற்று கிழமை என்பதால் இறைச்சி வாங்குவதற்காக கடைகளில் முண்டியடித்து குழந்தைகள், இளைஞர்கள் முதற்கொண்டு சென்றனர்.

புரட்டாசி மாதம் நிறைவு... டல் அடித்த இறைச்சிக் கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்... (ஆல்பம்)

இன்று காலை முதலே சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தபோதும், அதனை பொருட்படுத்தாமல் மீன்களை வாங்குவதற்காக காசிமேடு துறைமுகத்தில் தண்டையார் பேட்டை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர், எண்ணூர் பகுதி மக்கள் கூடினர்.

புரட்டாசி மாதம் நிறைவு... டல் அடித்த இறைச்சிக் கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்... (ஆல்பம்)

புரட்டாசி முடிந்ததால் மக்கள் மட்டுமல்லாமல் வியாபாரிகளும் திருப்தியடைந்துள்ளனர். இன்று அதிக மீன்கள் விற்பனையாகும் என்ற நோக்கில் விசைப்படகுகள், பைபர் படகுகளில் கடலில் நெடுந்தூரம் சென்று மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர்.

புரட்டாசி மாதம் நிறைவு... டல் அடித்த இறைச்சிக் கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்... (ஆல்பம்)

அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கியதால் வஞ்சிரம் கிலோவுக்கு 700 ரூபாய்க்கும், வவ்வால் 450, ஷீலா 300, இறால் 300, நண்டு 200, சங்கரா 200 ரூபாய் என மீன்கள் விற்பனை செய்யப்பட்டன.

புரட்டாசி மாதம் நிறைவு... டல் அடித்த இறைச்சிக் கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்... (ஆல்பம்)

மழை பெய்தபோதும் மீன் வாங்க வந்த மக்கள் விலை அதிகரித்துள்ளதை கண்டு சிறிய ரக மீன்களையே வாங்கிச் சென்றதாக விற்பனையாளர்கள் வேதனை தெரிவித்தனர். அதேபோல், சென்னை சிந்தாதிரிபேட்டையில் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன் வரத்து அதிகரித்துள்ளதால் மக்கள் கூட்டம் அலைமோதியது.

banner

Related Stories

Related Stories