
அப்போது பேசிய அவர், ''தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த மூன்று தினங்களுக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும் வெப்பச் சலனத்தின் காரணமாகவும் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை தொடரும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தர்மபுரி, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வரும் 21, 22 தேதிகளில் தமிழகத்தின் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை அயனாவரத்தில் 13 சென்டிமீட்டர் பெரம்பூரில் 12 சென்டிமீட்டர் நுங்கம்பாக்கத்தில் 10 சென்டிமீட்டர் நீலகிரியில் பணி 12 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
அக்டோபர் 1 முதல் இன்று வரை தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய 9 சென்டிமீட்டர் மழையில் 8 செ.மீ மழை கிடைக்கப்பெற்றுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்கள் லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய கேரள கடற்கரை பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்'' எனத் தெரிவித்தார்.








