தமிழ்நாடு

“அதிமுக ஆட்சியில் கமிஷன் அடிக்கப்படுகிறதே தவிர வேலை நடக்கவில்லை”- மக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

நாங்குநேரி தொகுதி காங்.வேட்பாளரை ஆதரித்து மக்களைச் சந்தித்து உரையாடினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

 “அதிமுக ஆட்சியில் கமிஷன் அடிக்கப்படுகிறதே தவிர வேலை நடக்கவில்லை”- மக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நாங்குநேரி சட்டமன்றத் இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து முன்னீர்பள்ளம் பகுதியில் சாலையில் இறங்கி பொதுமக்களிடம் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

அப்பகுதியில் மக்களைச் சந்தித்துப் பேசிய மு.க.ஸ்டாலின், “வரும் இடைத்தேர்தலில் ரூபி மனோகரன் அவர்களுக்கு வெற்றி தேடித் தருவீர்கள் என நம்புகிறேன்.

தமிழ்நாடே தண்ணீர் இல்லாமல் குடைத்தை தூக்கிக் கொண்டு சாலைக்கு வரும் நிலை ஏற்பட்டது. அ.தி.மு.க ஆட்சியில் கமிஷன் அடிக்கப்படுகிறதே தவிர பணிகள் ஏதும் நடைபெறவில்லை. முதியோர் உதவித்தொகை திட்டத்தைக் கூட சரியாக இந்த ஆட்சியில் செயல்படுத்தவில்லை; கட்சி பார்த்துத்தான் உதவி செய்கிறார்கள்.

இட ஒதுக்கீட்டை முறையாக வழங்கி உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும். அதைக்கேட்டால் உள்ளாட்சி தேர்தல் நடத்த தி.மு.க தடையாக உள்ளது என்று பொய்பிரச்சாரம் செய்கிறார்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்.

மத்திய அரசின் அடிமை ஆட்சி இங்கு நடைபெற்று வருகிறது. மக்களின் குறைகளை கேட்டு சரி செய்ய வேண்டியது ஆளும் கட்சிதான். அவர்கள் 8 ஆண்டுகளாகச் செயல்படவில்லை. எங்களைப் பொறுத்தவரை ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காகக் குரல் கொடுப்போம்.

 “அதிமுக ஆட்சியில் கமிஷன் அடிக்கப்படுகிறதே தவிர வேலை நடக்கவில்லை”- மக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

எல்லாத் தரப்பு மக்களுக்கும் திட்டங்கள் தந்தவர் கலைஞர். பெண்களுக்கு கலைஞர் ஆட்சியில் சொத்துரிமைச் சட்டம், வேலைவாய்ப்பில் 33% இடஒதுக்கீடு ஆகிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

குறிப்பாக, ஏழைப்பெண்கள் திருமண உதவித்திட்டம் இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில்தான் கொண்டுவரப்பட்டது. பெண்கள் முன்னேற்றத்திற்கு தி.மு.க ஆட்சியில்தான் பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

நாட்டை பாதுகாக்க பணியாற்றிய ரூபி மனோகரனுக்கு தொகுதி மக்களுக்காக பணியாற்ற வாய்ப்பளிக்க வேண்டும்” என மக்களிடம் கேட்டுக்கொண்டார் மு.க.ஸ்டாலின்.

banner

Related Stories

Related Stories