தமிழ்நாடு

நெடுஞ்சாலை பயணத்தின் போது உஷார்! - கார்களில் கல் எறிந்து கொள்ளை அடிக்கும் நூதன கும்பல்!

புதுச்சேரி- திண்டிவனம் சாலையில் இன்று அதிகாலை கார்களின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி கொள்ளை முயற்சி நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நெடுஞ்சாலை பயணத்தின் போது உஷார்! - கார்களில் கல் எறிந்து கொள்ளை அடிக்கும் நூதன கும்பல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

புதுச்சேரி கேண்டின் வீதியைச் சேர்ந்தவர் சிவா(44). இவர் இன்று அதிகாலை புதுச்சேரியிலிருந்து திருவண்ணாமலையில் நடக்கும் உறவினர் நிகழ்ச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஆரோவில் அடுத்த புளிச்சபள்ளம் புறவழிச்சாலை மேம்பாலத்தில் பதுங்கி இருந்த 3 பேர் கொண்ட கும்பல் காரின் மீது சரமாரியாக கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் கார் கண்ணாடி உடைந்துள்ளது. நிலைதடுமாறிய சிவா, காரை நிறுத்த முயன்ற போது, காருக்கு பின்னால் ஒரு கும்பல் துரத்தி வருவது கண்டு காரை வேகமாக எடுத்துச் சென்று போலிஸில் புகார் செய்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து மேலும் 5 பேர் தங்கள் கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாக புகார் கூறினர்.

இதனைத் தொடர்ந்து வானூர் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதைப்போன்று புதுச்சேரி- திண்டிவனம் நெடுஞ்சாலையில் கற்களை கொட்டி கார்களை வழிமறித்து கொள்ளை முயற்சி நடந்தது.

இதைப்போன்று தற்போது கார்களின் கண்ணாடியை உடைத்து, காரில் செல்பவர்கள் நிலைகுலைந்து வண்டியை நிறுத்தும்போது, கொள்ளையடிக்க கும்பல் ஒன்று திட்டம் தீட்டியதாகவும் கூறப்படுகிறது.

கார் கண்ணாடி உடைப்பு சம்பவம் புதுச்சேரி-திண்டிவனம் நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories