தமிழ்நாடு

நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் எழும்பூர் வரை இயக்கப்படாது : தென்னக ரயில்வே அறிவிப்பு!

அக்டோபர் 10ம் தேதி முதல் டிசம்பர் 7ம் தேதி வரை நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்னை எழும்பூர் வரை இயக்கப்படாது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் எழும்பூர் வரை இயக்கப்படாது : தென்னக ரயில்வே அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நாள்தோறும் பத்துக்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நெல்லை மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ஆகிய விரைவு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக அக்., 10 முதல் டிச., 7 வரை நெல்லை மற்றும் பொதிகை அதிவிரைவு ரயில்கள் எழும்பூர் வரை செல்லாது என்றும் தாம்பரத்தில் இருந்தே மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் இயக்கப்படும் என்றும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் எழும்பூர் வரை இயக்கப்படாது : தென்னக ரயில்வே அறிவிப்பு!

இதற்கிடையே, அடுத்து வரும் சில மாதங்களுக்கு தீபாவளி உட்பட பல பண்டிகைகள் தொடர்ந்து வருவதால் சென்னையில் இருந்து சொந்த ஊருக்குச் செல்வதற்காக ஏற்கெனவே முன்பதிவு செய்திருக்கும் பயணிகளுக்கு எழும்பூர் வரை நெல்லை, பொதிகை ரயில்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories