தமிழ்நாடு

பழுதடைந்த சாலைகள்; அலட்சியம் காட்டிய அதிகாரிகளை கேள்விக்கேட்டு திணற வைத்த தி.மு.க எம்.பி செந்தில்குமார்!

தருமபுரியில் சாலை அமைக்காததால் கோபமடைந்த திமுக எம்.பி. செந்தில் குமார் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு கிடுக்குப்பிடி கேள்வியை கேட்டு திணறடித்துள்ளார். 

பழுதடைந்த சாலைகள்;  அலட்சியம் காட்டிய அதிகாரிகளை கேள்விக்கேட்டு திணற வைத்த தி.மு.க எம்.பி செந்தில்குமார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் மட்டும் போதும். சுலபமாக மக்கள் நலத்திட்டம் என்ற பேரில் அரசியல் செய்து கோடிக்கோடியாக பணத்தை கொள்ளையடித்து செட்டில் ஆகிவிடலாம் என்ற கணக்கிலேயே ஆளுங்கட்சியினர் தற்போது செயல்பட்டு வருகின்றனர்.

அதற்கு நேர் எதிராக தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் திமுக, மக்களை நித்தமும் நேரடியாகவே அவர்களுக்கான குறைகளை கேட்டறிந்து, முறையாக அதனை நிவர்த்தியும் செய்து வருகிறது.

மாநிலத்தின் முதலமைச்சராக உள்ளவரே தனது சொந்த தொகுதி மக்களின் பிரச்னைகளை கண்டுகொள்ளாமல் ஆட்சியை மட்டுமே தக்கவைத்துக் கொள்வதில் முனைப்புடன் செயல்படும் சமயத்தில் தனக்கு ஓட்டு போட்டு வெற்றி பெறச்செய்த தனது தொகுதி மக்களுக்காக தினந்தோறும் குரல் எழுப்பி வருகிறார்கள் தி.மு.க நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள்.

பழுதடைந்த சாலைகள்;  அலட்சியம் காட்டிய அதிகாரிகளை கேள்விக்கேட்டு திணற வைத்த தி.மு.க எம்.பி செந்தில்குமார்!

அந்த வகையில், தருமபுரி மக்களவைத் தொகுதி தி.மு.க எம்.பியான மருத்துவர் செந்தில்குமாரின் பணிகள் நாளுக்கு நாள் ஆச்சர்யமடைய வைக்கும் வகையில் உள்ளது. தொகுதி மக்களின் குறைகளை நேரடியாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் கேட்டறிந்து அதனை போர்க்கால அடிப்படையில் தீர்த்து வைத்தும் வருகிறார்.

இந்த நிலையில், அயோத்தியாபட்டணம் முதல் பள்ளிப்பட்டு வரையில் உள்ள சாலை பழுதாகியுள்ளாதாக எம்.பி. செந்தில் குமாரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்திருக்கிறார்கள். இதனையடுத்து, நேரடியாக களத்திற்கு சென்று, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளையும் வரவழைத்து பணி நடைபெறாதது குறித்து கேள்வி கேட்டு துளைத்தெடுத்துள்ளார்.

35 கி.மீ தொலைவுக்கு சாலை அமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டு 7 மாதங்கள் ஆகியும் இதுவரை சாலை அமைப்பதற்கான பணியை ஒப்பந்ததாரர் தொடங்காதது ஏன் என செந்தில் குமார் கேட்டதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரியோ அலட்சிய தொணியில் அது பற்றி தெரியவில்லை, அடுத்த வாரத்தில் தொடங்குவார்கள் என கூறியிருக்கிறார்.

பழுதடைந்த சாலைகள்;  அலட்சியம் காட்டிய அதிகாரிகளை கேள்விக்கேட்டு திணற வைத்த தி.மு.க எம்.பி செந்தில்குமார்!

இந்த அலட்சிய பதிலைக் கேட்டு கோபமுற்ற எம்.பி செந்தில்குமார், உடனே ஒப்பந்ததாரரையும் அழைத்து சாலைப் பணியை முடிப்பது குறித்து கேள்வி எழுப்பியதும், அடுத்த வாரம் புதன் கிழமை சாலை அமைக்கும் பணியை தொடங்குவதாக உறுதியளித்துள்ளார் ஒப்பந்ததாரர் முத்துக்கிருஷ்ணன்.

திமுக எம்.பி. செந்தில்குமாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் அ.தி.மு.கவினருக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மக்கள் மத்தியில் அவருக்கு தொடர்ந்து வாழ்த்துகளும், பாராட்டுகளும் கிடைக்கப்பெற்று வருகின்றன.

banner

Related Stories

Related Stories