தமிழ்நாடு

நாங்குநேரி – விக்ரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி – விக்ரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்த சந்திப்பின் போது, “தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்.” என அறிவித்தார்.

அந்த அறிவிப்பின்படி, செப்டம்பர் 23-ம் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்கும். வேட்பு மனுதாக்கல் செய்யவேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 30-ம் தேதி. அதன்பின்பு வேட்பு மனு பரிசீலனை நடைபெறும்.

மனுக்களை திரும்பப் பெற அக்டோபர் 3-ம் தேதி கடைசி நாள் எனவும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அக்டோபர் 24-ம் தேதி வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறை முறைகளும் உடனடியாக அமல்படுத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

மேலும் மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகளையும் சுனில் அரோரா அறிவித்தார்.

banner

Related Stories

Related Stories