தமிழ்நாடு

மிதமான மழைக்கே சென்னை விமான நிலையத்தின் கதி இதுவென்றால், நவம்பா்,டிசம்பா் மழைக்கு என்னவாகும்?

மிதமான மழைக்கே சென்னை விமான நிலையத்தின் கதி இதுவென்றால், நவம்பா்,டிசம்பா் மழைக்கு என்னவாகும்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சென்னை விமானநிலையத்தின் உள்நாடு மற்றும் சா்வதேச முணையங்கள் ரூ.2,100 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டு கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரியில் திறப்பு விழா நடந்தது. அதன்பின்பு அதே ஆண்டின் மே மாதத்திலிருந்து புதிதாக கட்டப்பட்ட முணையங்களில் தொடா்ச்சியாக விபத்துக்கள் நடந்தன.

மேற்கூரைகள் உடைந்து நொறுங்கி விழுவது,கண்ணாடி கதவுகள்,சுவா்களில் பதிக்கப்பட்ட கண்ணாடிகள் பெயா்ந்து விழுவது,சுவா்களில் பதிக்கப்பட்டுள்ள அலங்கார சலவை கற்கள் பெயா்ந்து விழுவது என்று இதுவரையில் 89 விபத்துக்கள் நடந்துள்ளன.

அந்த விபத்துக்களில் பயணிகள்,பயணிகளை வழியனுப்ப வந்தவா்கள்,விமானநிலைய தற்காலிக பணியாளா்கள்,பாதுகாப்புபடையினா் என்று இதுவரை 17 போ் லேசான காயமடைந்துள்ளனர். கடந்த 6 மாதங்களாக அதைப் போன்ற விபத்துக்கள் நடக்கவில்லை.

மிதமான மழைக்கே சென்னை விமான நிலையத்தின் கதி இதுவென்றால், நவம்பா்,டிசம்பா் மழைக்கு என்னவாகும்?

இந்நிலையில் நேற்று ஒரு நாள் பெய்த கன மழைக்கே உள்நாட்டு முணையத்தின் 2 தளத்தில் உள்ள புறப்பாடு பகுதியில், பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனைகள் நடத்தும் இடங்களில் பெருமளவு மழைநீா் கசிந்து ஒழுகியது. மேற்கூரை தரமாக அமைக்கப்படாததால் தான் நீர் கசிந்ததாக கூறப்படுகிறது. மேற்கூரையிலிருந்து ஒழுகிய மழை நீரை விமானநிலைய ஊழியா்கள் பிளாஸ்டிக் டப்புகள் வைத்து பிடித்து நீரை வெளியே கொட்டினா்.

இந்த மிதமான மழைக்கே இப்படியென்றால்,வரும் நவம்பா்,டிசம்பா் மாதம் பெய்யும் மழையில் விமானநிலையம் என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது.

இன்று காலை 5 மணி விமானத்தில் டில்லி செல்வதற்காக தி.மு.க எம்.பி. கனிமொழி சென்னை உள்நாட்டு முணையத்திற்கு வந்தாா். அவரும் இந்த காட்சியை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். அங்குள்ள விமானநிலைய அதிகாரிகளிடமும் அதுபற்றி விசாரித்தாா். அதிகாரிகள் சமீபகாலமாகத்தான் இதைப்போல் நீா் கசிகிறது என்று கூறினா். ஆனால் சரியான பதில் அளிக்கவில்லை.

இதையடுத்து அவா் அந்த காட்சிகளை தனது செல்போனில் படம் பிடித்து தனது டுவிட்டா் மற்றும் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார், ''முன்பு சென்னை விமானநிலையத்தில் பால்ஸ் சீலிங் உடைந்து விழுந்தது. தற்போது மேற்கூரை ஷவராக மாறிவிட்டது. கசியும் தண்ணீரை தற்போது டப்பில் பிடிக்கின்றனா்'' என பதிவிட்டுள்ளாா்.

இதுபற்றி சென்னை விமானநிலைய இயக்குநா் ஶ்ரீகுமாரிடம் கேட்டதற்கு, ”விமானநிலையத்தின் மேற்பகுதியில் காங்ரீட் ரூப் கிடையாது. ஷீட்கள் தான் போடப்பட்டுள்ளது. அதில் ஒருசில இடங்களில் இதைப்போல் நீா்கசிவுகள் ஏற்படுகின்றன. அதுவும் நேற்று இரவிலிருந்து தான் ஏற்பட்டுள்ளது. அந்த இடங்களை கண்டுப்பிடித்து சரி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். ஒரிரு நாட்களில் சரிசெய்து விடுவோம்.” என்று கூறினாா்.

banner

Related Stories

Related Stories