தமிழ்நாடு

“எவன் வந்தாலும் வெட்டி வீழ்த்துவோம்” கொலைமிரட்டல் விடுத்த பா.ஜ.க நிர்வாகி மீது வழக்குப் பதிவு!

இந்திக்கு ஆதரவாகவும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுத்தும் பா.ஜ.க நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

“எவன் வந்தாலும் வெட்டி வீழ்த்துவோம்” கொலைமிரட்டல் விடுத்த பா.ஜ.க நிர்வாகி மீது வழக்குப் பதிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
premjourn
Updated on

டெல்லியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்தி திவாஸ் நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழி அவசியம் என்று கூறியிருந்தார். மேலும் அந்தக்கருத்தை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்தார்.

அவரின் கருத்துக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நட்டாலம் சிவின்குமார் என்பவர், இந்தி மொழியை ஆதரித்தும், இந்தி திணிப்பை எதிர்த்து வரும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் ஒருபதிவை முகநூலில் பகிர்ந்துள்ளார்.

“எவன் வந்தாலும் வெட்டி வீழ்த்துவோம்” கொலைமிரட்டல் விடுத்த பா.ஜ.க நிர்வாகி மீது வழக்குப் பதிவு!

அதில், “இந்தி மொழியை ஆதரித்து இந்திக்கு எதிராக வீதியில் எவன் வந்தாலும் அவனை வெட்டி வீழ்த்துவோம். இந்தி எங்கள் உயிரடா!”என்றும் பதிவிட்டிருந்தார். அவரின் பதிவுகள் வன்முறையைத் தூண்டும் விதத்தில் இருப்பதாகவும் வெளிப்படை கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் நட்டாலம் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யக் கோரி மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் தி.மு.க இளைஞரணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப்புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் நட்டாலம் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories