தமிழ்நாடு

வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்கள் சிவில் நீதிபதியாக தேர்வு பெற இலவச பயிற்சி : பார்கவுன்சில் அறிவிப்பு!

சிவில் நீதிபதிகளுக்கான தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த இருப்பதாக தமிழக மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்கள் சிவில் நீதிபதியாக தேர்வு பெற இலவச பயிற்சி : பார்கவுன்சில் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கிராமப்புற மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள சட்டம் பயின்றவர்கள், சிவில் நீதிபதிகளுக்கான தேர்வுக்கு தங்களை தயார் செய்ய ஏதுவாக இலவச பயிற்சி அளிக்கப்படும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த இலவச பயிற்சி வகுப்பானது வரும் செப்டம்பர் 23ம் தேதி அன்று சென்னையில் உள்ள பார் கவுன்சில் அரங்கில் மாலை 4 மணிக்கு தொடங்கப்படுகிறது. இலவச பயிற்சியில் நேரில் கலந்து கொள்ள முடியாதவர்கள் ஆன்லைன் மூலமாகவும் வகுப்பில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் நீதிபதிகளுக்கான தேர்வில் தங்களை தயார்படுத்தி தேர்வில் வெற்றி பெற தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories