தமிழ்நாடு

கோரிக்கைகள் குறித்து தமிழக அரசு அழைத்துப் பேசாவிட்டால் போராட்டம் தொடரும் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

9 அம்ச கோரிக்கைகள் குறித்து தமிழக அரசு அழைத்துப் பேசாவிட்டால் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்குமென ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன் தெரிவித்தார்.

கோரிக்கைகள் குறித்து தமிழக அரசு அழைத்துப் பேசாவிட்டால் போராட்டம் தொடரும் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சென்னை மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில் பள்ளிகளை குறைக்கும் அரசாணை எண் 145 கைவிடக் கோரியும், அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பணியாளர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் மாலையில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக சென்னை சேப்பாக்கத்தில் கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நில அளவையர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த பேரணி சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள ஆவின் பாலகம் வரை நடைபெற்றது. அதன் பின்னர் ஆர்பாட்டமும் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பேரணியில் கலந்துகொண்டு தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன், பள்ளிகளை குறைக்கும் அரசாணை 145 வாபஸ் பெற வேண்டும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

நிர்வாகத்திற்காக இரண்டு மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கும் தமிழக அரசு, பள்ளிகளை மட்டும் மூடிக் கொண்டே இருக்கிறது என்றார். மேலும் அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் நோக்கத்திலேயே அரசுப் பள்ளிகளை மூடி வருவதாக குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் அரசாங்கம் இருக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை என தெரிவித்த அவர் தங்கள் கோரிக்கைகள் குறித்து அழைத்து பேசாவிட்டால் போராட்டத்தை நிறுத்த போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories