தமிழ்நாடு

திடீரென பச்சை நிறத்தில் மாறிய கடல்நீர்... விஷ பாசிகள் காரணமா? - விளக்கிய விஞ்ஞானிகள்!

மன்னார் வளைகுடா பகுதியான பாம்பன் கடல் பகுதியில் கடல்நீரின் நிறம் பச்சையாக மாறியதோடு மீன்களும் இறந்து மிதந்ததால் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது.

திடீரென பச்சை நிறத்தில் மாறிய கடல்நீர்... விஷ பாசிகள் காரணமா? - விளக்கிய விஞ்ஞானிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மன்னார் வளைகுடா பகுதி எண்ணற்ற உயிரிகளையும், ஏராளமான கடல்வளத்தையும் உள்ளடக்கியது. இந்நிலையில், நீல நிறத்தில் இருக்கும் கடல் பாம்பன் குந்துகால் பகுதியில் நேற்று மாலை திடீரென, பச்சை வண்ணத்தில் காட்சியளித்தது.

அதோடு, நுரை மிதந்ததால் சுவாசிக்க வழியின்றி, இப்பகுதியிலுள்ள மீன்களும் செத்து மிதந்தன. இதனால் பதறிய மீனவர்கள் மண்டபம் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் குழுவினர், அப்பகுதிக்கு வந்து பச்சை நிறமாக மாறியிருந்த கடல் நீரை சோதனையிட்டனர். பின்னர் ஆய்வுக்காக நீரை பெரிய டப்பாக்களில் சேகரித்ததுடன், இறந்து கிடந்த மீன்களையும் எடுத்துச் சென்றனர்.

பின்னர், இதுகுறித்து விளக்கமளித்த மண்டபம் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், “ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் வரை தென்கடல் பகுதியில் குறிப்பிட்ட சில நாட்கள் கடலில் உள்ள ‘நாட்டிலூகா’ என்ற கண்ணுக்கு தெரியாத பாசிகள், தனது மகரந்த சேர்க்கைக்காக கடலில் படரும்.

திடீரென பச்சை நிறத்தில் மாறிய கடல்நீர்... விஷ பாசிகள் காரணமா? - விளக்கிய விஞ்ஞானிகள்!

அப்போது கடல்நீர் பச்சை நிறத்தில் காட்சியளிக்கும். கடல் நீரோட்டம் வேகமாக இருக்கும்போது, நிறம் மாறுவது தெரியாது. ஆனால் தற்போது நீரோட்டம் குறைவாக இருப்பதால் பச்சை நிறத்தில் தெளிவாகத் தெரிகிறது.

நாட்டிலூகா பாசியகள் கடல்நீரின் மேற்பரப்பில் படர்ந்து காணப்படுவதால் மீன்களின் செதில்கள் அடைக்கப்பட்டு சுவாசிக்க முடியாமல் இறக்கின்றன. ஓரிரு நாட்களில் கடல் இயல்பு நிலைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கிறோம்.

கடல் நீர் பச்சையாக இருப்பது 3 நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் கடலில் வாழும் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது கடலானது அதிகமாக பச்சை நிறமாக மாறியுள்ளது.” எனத் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories