தமிழ்நாடு

வீடு கட்ட தோண்டிய குழியில் புதையல்... அரசிடமிருந்து மறைக்க நினைத்து மாட்டிக்கொண்ட உரிமையாளர்!

உத்தர பிரதேசத்தில் வீடு கட்டுவதற்குக் குழி தோண்டும்போது 25 லட்ச ரூபாய் மதிப்பிலான புதையல் கிடைத்துள்ளது. அந்தப் புதையலை அதிகாரிகள் கைப்பற்றியதால் நில உரிமையாளர் சோகத்தில் மூழ்கியுள்ளார்.

வீடு கட்ட தோண்டிய குழியில் புதையல்... அரசிடமிருந்து மறைக்க நினைத்து மாட்டிக்கொண்ட உரிமையாளர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உத்தர பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது நிலத்தில் வீடு கட்டுவதற்கு குழி தோண்டியுள்ளார். அப்போது இரு பழைய பானைகள் தட்டுப்பட்டுள்ளன. அவற்றில் என்ன உள்ளது என ஆர்வத்துடன் எடுத்துப் பார்த்தபோது அந்தப் பானைகளில் தங்கம், வெள்ளி ஆபரணங்கள் இருந்துள்ளன. அந்தப் புதையலை அவர் யாருக்கும் தெரியாமல் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

புதையல் கிடைத்தது தொடர்பான தகவல் அக்கம்பக்கம் பரவத் தொடங்கியுள்ளது. இதனையறிந்த போலிஸார் புதையல் கிடைத்தவரின் வீட்டில் சோதனையிட்டு, அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். முதலில் நகை தன்னுடையது தான் என்று கூறிவந்துள்ளார். அதற்கான ஆதாரங்கள் கேட்டபோது எதுவும் இல்லாத நிலையில் போலிஸார் புதையலை பறிமுதல் செய்துள்ளனர்.

அந்த புதையலில் 650 கிராம் தங்கம் மற்றும் 4.53 கிலோ வெள்ளி நகைகள் இருந்துள்ளன. இந்த நகைகள் அனைத்தும் பழங்காலத்தைச் சேர்ந்தவை என்றும் அதன் மதிப்பு சுமார் 25 லட்சம் ரூபாய் இருக்கும் எனவும் போலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நகைகள் குறித்து தொல்லியல் துறைக்கு தெரிவிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்படும் என்றும் போலிஸார் கூறியுள்ளனர்.

முன்னதாக 1878-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்திய புதையல் சட்டங்களின் படி பூமிக்கு அடியில் கிடைக்கும் புதையல், கனிமங்கள் அனைத்தும் அரசுக்கே சொந்தம்; நிலத்தின் உரிமையாளர் சொந்தம் கொண்டாட முடியாது.

நிலத்தில் கிடைக்கும் புதையலை மாவட்ட வருவாய் அதிகாரியிடம் ஒப்படைத்துவிடவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அந்தப் புதையலை ஒப்படைக்கும் நிலத்தின் உரிமையாளருக்கும் நேர்மைக்கான சன்மானமாக ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

தற்போது புதையலை எடுத்தவர் அரசிடம் ஒப்படைக்காமல் ஏமாற்ற நினைத்ததால் அவருக்கு சன்மானம் வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிகழ்வு அப்பகுதி மக்கள் மத்தியில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories