தமிழ்நாடு

சாலையோரத்தில் ஜிம்னாஸ்டிக் சாகசம் செய்து வைரலான சிறுவர்கள் : ஒலிம்பிக் தங்கமங்கை பாராட்டு!

கொல்கத்தா பள்ளி மாணவர்கள் ஜாஷிகா கான் மற்றும் முகமது அசாஜுதின் ஆகியோரை ஐந்து முறை ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் தங்கம் வென்ற நடியா காமென்ஸி பாராட்டியுள்ளார்.

சாலையோரத்தில் ஜிம்னாஸ்டிக் சாகசம் செய்து வைரலான சிறுவர்கள் : ஒலிம்பிக் தங்கமங்கை பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சமீபத்தில் பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒரு சிறுவனும், சிறுமியும் செய்த ஜிம்னாஸ்டிக் சாகச வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த வீடியோவை ஐந்து முறை ஜிம்னாஸ்டிக் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நடியா காமென்ஸி பகிர்ந்து பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தார்.

இதனையடுத்து, சிறுமி ஜாஷிகா கான் மற்றும் சிறுவன் முகமது அசாஜுதின் குறித்த தகவல் வெளிவந்தது. அவர்கள் இருவரும் கொல்கத்தாவின் பினார் பகுதியைச் சேர்ந்தவர்கள். 11 வயது சிறுமி ஜாஷிகா மற்றும் 12 வயது சிறுவன் அசாஜுதீன் ஆகிய இருவரும் வீட்டுக்கு அருகில் இருக்கும் அரசுப் பள்ளியில் படித்து வருகிறார்கள்.

ஜாசிகாவின் தந்தை டிரைவராக வேலைசெய்து வருகிறார். அவர்கள் அரசு குடிசைமாற்று வாரிய வீட்டில் தான் தற்போது வசித்து வருகின்றனர். அதேபோல அசாஜுதீனின் தந்தை கூலி வேலை செய்துவருகிறார்.

இருவருமே, சிறுவயதில் இருந்தே ஜிம்னாஸ்டிக் சாககசத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டு அதற்கான முயற்சிகளைச் செய்து வருகிறார்கள். அவ்வப்போது இதுபோல சாகசம் செய்து பயிற்சி பெறுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அப்படித்தான் அந்த சாகச வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளிவந்தது. அந்த வீடியோ வைரலாகப் பரவியதால் ஒட்டுமொத்த உலகமே அவர்களை வியந்து பார்த்து வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறது.

அதுமட்டுமின்றி, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மாணவர்கள் இருவரும் முறையாகப் பயிற்சி பெற மத்திய அரசு உதவும் என்று உறுதியளித்திருந்தார். சிறுவர்களுக்கு மத்திய அரசு அளித்த வாக்குறுதியை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் இவர்களது திறமையைக் கண்ட நடனக் கலைஞர் ஒருவர் அவர்களுக்கு இலவசமாகப் பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories