தமிழ்நாடு

சென்னையில் 3 மாதங்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 10,791 பேர் : அபராதமாக 18.80 லட்சம் வசூல்!

சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தவர்களிடம் இருந்து 18,80,850 ரூபாய் அபராதம் வசூலிக்கப் பட்டுள்ளதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 3 மாதங்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 10,791 பேர் : அபராதமாக 18.80 லட்சம் வசூல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சென்னை மாநகரப் பேருந்துகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். பயணிகளுக்கு பாஸ் உள்ளிட்ட சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் பலர் டிக்கெட் எடுக்காமல் பயணித்து வருகின்றனர்.

பேருந்துகளில் உரிய பயணச்சீட்டு மற்றும் பஸ் பாஸ் இல்லாமல் பயணம் செய்வது மோட்டார் வாகன சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இதனை தடுக்க அவ்வப்போது பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

சென்னையில் 3 மாதங்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 10,791 பேர் : அபராதமாக 18.80 லட்சம் வசூல்!

இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களில் சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்த 10,791 பேரிடம் இருந்து 18.80 லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்கப் பட்டுள்ளதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தோர் கடந்த மே மாதத்தில் 3,915 பேரிடம் அபராதத் தொகையாக 6,00,850 ரூபாயும், ஜூன் மாதத்தில் 3,658 பேரிடம் அபராதத் தொகையாக 5,24,100 ரூபாயும், ஜூலை மாதத்தில் 3,218 பேரிடம் அபராதத் தொகையாக 5,55,900 ரூபாய் என மொத்தம் 10,791 பேரிடம் அபராதத் தொகையாக 16,80,850 ரூபாய் வசூலிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களிலும் இந்த நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும் என சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories