தமிழ்நாடு

இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய மோட்டார் வாகன சட்டம்; வாகன ஓட்டிகளே உஷார்!

சாலை போக்குவரத்து விதிகளை மீறினால் கடுமையான அபராதம் விதிக்கும் புதிய மோட்டார் வாகன திருத்த மசோதா இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.

இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய மோட்டார் வாகன சட்டம்; வாகன ஓட்டிகளே உஷார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதிய மோட்டார் வாகன சட்டப்படி, பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிக அளவில் விபத்துகள் ஏற்படுவதால் அதனை கட்டுப்படுத்தவும், உயிரிழப்புகளை தடுக்கவும், பழையை சட்டத்தில் சில முக்கிய திருத்தத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1939ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மோட்டார் வாகனச்சட்டன்ம் 1988ம் ஆண்டு தான் முதன்முறையாக திருத்தப்பட்டது. அதன் பின்னர், 2017ம் ஆண்டு மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு மாறுதல்களை செய்தது.

அதற்கான திருத்த மசோதா, அண்மையில் நடைபெற்ற நாடாமன்றக் கூட்டத்தொடரின் போது இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, 2019 மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தில் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், லைசென்ஸ் காலாவதியாகிவிட்டால் ஒரு மாதத்திற்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை ஒரு ஆண்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு லைசென்ஸ் அனுமதி, மோட்டார் வாகன விபத்தில் உயிரிழக்கும் உரிமையாளருக்கு அல்லது காப்பீடுதாரருக்கு 5 லட்சம் இழப்பீடு, படுகாயமடைபவர்களுக்கு 2.5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவது போன்ற திருத்தத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், போக்குவரத்து விதிகளை மீறும் நபருக்கு அபராதக் கட்டணம் முன்பு இருந்ததை விட பன்மடங்கு அபராதம் விதிப்பது போன்றவை புதிய மோட்டார் வாகனச் சட்டத்திருத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆகையால், கட்டாயம் சாலை போக்குவரத்து விதிகளை மக்கள் கடைபிடித்தாக வேண்டும். இல்லையெனில் 10 ஆயிரம் ரூபாய் கணக்கில் அபராதம் செலுத்த நேரிடும் என வாகன ஓட்டிகள் கருத்தில் கொள்ளவேண்டும்.

இருப்பினும், சாலைகளை ஒழுங்காக அமைக்காமல், தரமான தலைக்கவசங்களை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையை எடுக்காமல் மக்கள் மீது இவ்வாறு அபராதம் செலுத்துவதை சமூக ஆர்வலர்கள் சிலர் வன்மையாக கண்டித்தும் வருகின்றனர்.

இந்த புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் மூலம் வருவாயை பெருக்கிக் கொள்வதற்காக மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories