இந்தியா

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு உச்சபட்ச அபராதம் : மோட்டார் வாகன சட்டத்தில் மாற்றம்!

மோட்டார் வாகன சட்டத்தில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் கூடிய விரைவில் மசோதா நிறைவேற்றப்பட உள்ளது.

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு உச்சபட்ச அபராதம் : மோட்டார் வாகன சட்டத்தில் மாற்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க-வின் கடந்த ஆட்சியின் போது மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மக்களவையில் மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்கு மாநிலங்களவையில் எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் மக்களவை கலைக்கப்பட்டதால் மசோதா காலாவதியானது.

இதனையடுத்து, மோட்டார் வாகன சட்டத்தில் புதிய மாற்றங்களை உருவாக்கி மசோதவை மீண்டும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. சட்ட திருத்தத்தில், விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கடுமையான அபராதமும், தண்டனையும் வழங்கும்படி புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு உச்சபட்ச அபராதம் : மோட்டார் வாகன சட்டத்தில் மாற்றம்!

முன்பு விதிக்கப்பட்ட அபராதத்தை விட தற்போது நிறைவேற்றப்பட உள்ள மசோதாவின் மூலம் பன்மடங்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.100 விதிக்கப்பட்ட அபராதம் 1000 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் சீட் அணியாமல் சென்றால் ரூ.100க்கு பதில் ரூ.1000 வசூலிக்கப்படும். ஆம்புலன்ஸ் போன்ற அவசர கால வாகனங்களுக்கு வழிவிடாமல் இருந்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு உச்சபட்ச அபராதம் : மோட்டார் வாகன சட்டத்தில் மாற்றம்!

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 ஆக இருந்த அபராதம் ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டதையும் மீறி வாகனம் ஓட்டினால் ரூ.5,00 க்கு பதில் ரூ.10,000 வசூலிக்கப்படும்.

மது போதையில் வாகனம் ஓட்டினால் 2 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்ட நிலையில் 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. வேகமாக வாகனம் ஓட்டினாலோ, ரேசிங் போன்ற பந்தயத்தில் ஈடுபட்டாலோ ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு உச்சபட்ச அபராதம் : மோட்டார் வாகன சட்டத்தில் மாற்றம்!

மேலும், அதிகளவு சுமையை ஏற்றி வாகனம் ஓட்டினால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டு ஒரு டன்னுக்கு ரூ.1,000 வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.20,000 அபராதமும், ஒரு டன்னுக்கு தலா 2 ஆயிரமும் வசூலிக்கப்படும்.

சிறுவர்கள் வாகனங்களை ஓட்டினாலோ, அதன் மூலம் விபத்து ஏற்படுத்தினாலோ பெற்றோர்கள் அல்லது வாகன உரிமையாளர்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும்.

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு உச்சபட்ச அபராதம் : மோட்டார் வாகன சட்டத்தில் மாற்றம்!

அதுமட்டுமல்லாமல், சாலை மோசமானதாக இருந்து விபத்து ஏற்பட்டால் ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கவும், விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட இருக்கிறது.

banner

Related Stories

Related Stories