தமிழ்நாடு

வெளிநாட்டு பயணத்தின் போது யாரிடம் பொறுப்பை ஒப்படைப்பது? - யாரை நம்புவது எனத் தெரியாமல் குழம்பும் எடப்பாடி

அரசு முறை பயணமாக வெளிநாடு செல்லும் போது முதல்வர் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது எனத் தெரியாமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார்.

வெளிநாட்டு பயணத்தின் போது யாரிடம் பொறுப்பை ஒப்படைப்பது? - யாரை நம்புவது எனத் தெரியாமல் குழம்பும் எடப்பாடி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அரசு முறை பயணமாக அடுத்த வாரம் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு செல்லவுள்ளார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

ஆக.,28 முதல் 14 நாட்களுக்கு எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால், அவரது பொறுப்பை யார் கவனிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதலமைச்சர் பொறுப்பை துணை முதலமைச்சராக உள்ள ஓ.பி.எஸிடம் கொடுக்கப்படுமா அல்லது எடப்பாடியின் நெருக்கமான அமைச்சராக உள்ள வேலுமணி, தங்கமணியிடம் கொடுக்கப்படுமா என்பது அ.தி.மு.க-வில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

வெளிநாட்டு பயணத்தின் போது யாரிடம் பொறுப்பை ஒப்படைப்பது? - யாரை நம்புவது எனத் தெரியாமல் குழம்பும் எடப்பாடி

இதனையடுத்து, யாரிடம் தன்னுடைய பொறுப்புகளை ஒப்படைப்பது குறித்து எடப்பாடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் விஜயபாஸ்கர், தங்கமணி, வேலுமணி மற்றும் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது எடப்பாடி பழனிசாமியே தனது பொறுப்பினை கவனிப்பார் எனவும், முக்கிய முடிவுகள் தொடர்பாக வெளிநாட்டில் இருந்தபடியே ஆலோசனை மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் பொறுப்பை யாரிடமாவது கொடுத்தால் தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடும், தேவையில்லாத பிரச்னைகள் உருவாகும் என்பதை மனதில் வைத்து இந்த முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories