தமிழ்நாடு

“அனுமதி வழங்கும் வரை, போராட்டத்தை கைவிட முடியாது” தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் : அதிர்ச்சியில் மக்கள்!

தமிழகம் முழுவதும் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று முதல் தொடங்கியுள்ளனர். இதனால் குடிநீர் வழங்குவதில் சிக்கல் உருவாகியுள்ளது.

“அனுமதி வழங்கும் வரை, போராட்டத்தை கைவிட முடியாது” தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் : அதிர்ச்சியில் மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பருவ மழை குறைவுக் காரணமாக தமிழகம் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை சந்தித்து வருகின்றது. தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுகிறது. ஆனால் தண்ணீர் எடுப்பதற்கு அ.தி.மு.க அரசு எந்த ஒரு ஏற்பாட்டையும் செய்துக் கொடுக்காததால், தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சில பகுதிகளில் நிலத்தடி நீரை எடுத்து விநியோகின்றனர்.

சில லாரி உரிமையாளர்கள் தண்ணீரை சட்டவிரோதமாக விற்பனையும் செய்து வருகின்றனர். இதனை அ.தி.மு.க அரசு முறைப்படுத்த தவறியதால் மக்களே நிலத்தடி நீரை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து லாரிகளை சிறை பிடிக்கின்றனர். பல இடங்களில் ஓட்டுநர்கள் மீது தாக்குதலும் நடைபெறுகிறது.

இந்நிலையில், சென்னை புறநகர் பகுதிகளில் நிலத்தடி நீரை அனுமதியின்றி எடுப்பதாகக் கூறி, லாரிகளின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது போலிஸாரும் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். இதனையடுத்து தண்ணீர் எடுக்க முறையான நடவடிக்கை வழங்கினால் மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்வோம் என தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று முதல் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கூறுகையில், “தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுங்கள் என்று அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள். அரசு அதிகாரியின் அனுமதியுடன் தண்ணீர் எடுத்தால், போலிஸார் அனுமதியில்லாமல் தண்ணீர் எடுப்பதாகக் கூறி வழக்குப்பதிவுச் செய்கின்றனர்.

“அனுமதி வழங்கும் வரை, போராட்டத்தை கைவிட முடியாது” தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் : அதிர்ச்சியில் மக்கள்!

இதனால் லாரிகளின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கடும் பாதிப்புகளை சந்திக்கின்றனர். எனவே முறையாக தண்ணீர் எடுப்பதற்கு அரசு அனுமதி வழங்கினால் மட்டுமே போராட்டத்தை நிறுத்துவோம். இல்லையெனில் போராட்டத்தை கைவிட மாட்டோம்.” என தெரிவித்துள்ளார்.

இதனால் மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல் உருவாகியுள்ளது. இதில் உடனடியாக அரசு தலையீட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories