தமிழ்நாடு

“300 ரூபாய் போதாது... 1,000 வேண்டும்” : அடாவடியாக கடைக்காரரை தாக்கிய பா.ஜ.க கும்பல்!

திருப்பூரில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பணம் கேட்டு கடை வியாபாரி தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“300 ரூபாய் போதாது... 1,000 வேண்டும்” : அடாவடியாக கடைக்காரரை தாக்கிய பா.ஜ.க கும்பல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திருப்பூரில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் சிலை வைப்பதற்கு அதிக பணம் கேட்டு கடை வியாபாரி தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ண ஜெயந்தி விழா வரும் ஆகஸ்ட் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கிருஷ்ண‌ர் சிலை வைப்பதற்காக அப்பகுதியில் உள்ள கடைகளில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் பணம் வசூலித்தனர்.

அந்தப் பகுதியில் சிவா என்பவர் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். அவரிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) அன்று விஷ்வ ஹிந்து அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட 5 பேர் சென்று நன்கொடை கேட்டபோது, அவர் 300 ரூபாய் கொடுத்துள்ளார்.

ஆனால், அவர்கள் அதை ஏற்க மறுத்து ஆயிரம் ரூபாய் கேட்டு வற்புறுத்தியுள்ளனர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படவே, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர் உள்ளிட்ட அந்த கும்பல், கடை உரிமையாளர் சிவாவை தாக்கியுள்ளது.

தொடர்ந்து, கடையில் இருந்தவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இந்தக் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இதுகுறித்து, சிசிடிவி ஊத்துக்குளி காவல்நிலையத்தில் சிவா புகார் அளித்தார். இதையடுத்து, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த வசந்த், விக்னேஷ் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், பா.ஜ.க-வின் துணை அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கடைக்காரரைத் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ட்விட்டரில் #BJPரவுடிசம் எனும் ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது.

banner

Related Stories

Related Stories