தமிழ்நாடு

அடுத்தடுத்து மோதிக்கொண்ட 7 கார்கள் : சினிமா சண்டைக் காட்சி போல் நிகழ்ந்த கோர விபத்தில் 6 பேர் பலி

புதுக்கோட்டையில் ஒன்றன் பின் ஒன்றாக கார் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்து மோதிக்கொண்ட 7 கார்கள் : சினிமா சண்டைக் காட்சி போல் நிகழ்ந்த கோர விபத்தில் 6 பேர் பலி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் நாள்தோறும் சாலை விபத்துகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அது போல், திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை நடைபெற்ற கார் விபத்தால் 6 பேர் பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் உயிருக்கு போராடி வருகின்றனர்.

அடுத்தடுத்து மோதிக்கொண்ட 7 கார்கள் : சினிமா சண்டைக் காட்சி போல் நிகழ்ந்த கோர விபத்தில் 6 பேர் பலி

நேற்று மாலை 4 மணியளவில் திருச்சியை நோக்கி சென்றுக்கொண்டிருந்த கார் ஒன்று முன்புறம் இருந்த வலதுபக்க டயர் திடீரென வெடித்ததால் நிலைத்தடுமாறி சாலையின் மத்தியில் தாறுமாறாக ஓடியது.

அடுத்தடுத்து மோதிக்கொண்ட 7 கார்கள் : சினிமா சண்டைக் காட்சி போல் நிகழ்ந்த கோர விபத்தில் 6 பேர் பலி

அந்த சமயத்தில் திருச்சி மற்றும் புதுக்கோட்டையை நோக்கி சாலையின் இருபுறமும் வந்துகொண்டிருந்த 6 கார்கள் ஒன்றின் பின் ஒன்றாக மோதிக்கொண்டன. இதனையடுத்து விபத்தை சந்தித்த கார்கள் அனைத்தும் சாலையில் குறுக்கும் நெடுக்குமாக நின்றன.

அடுத்தடுத்து மோதிக்கொண்ட 7 கார்கள் : சினிமா சண்டைக் காட்சி போல் நிகழ்ந்த கோர விபத்தில் 6 பேர் பலி

சில கார்கள் தலைக்கீழாகவும் விழுந்து கிடந்தன. இதனால் காருக்குள்ளிருந்தவர்கள் தங்களை காப்பாற்றும்படி கூக்குரலிட்டனர். இந்த கோர விபத்தினால் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

அடுத்தடுத்து மோதிக்கொண்ட 7 கார்கள் : சினிமா சண்டைக் காட்சி போல் நிகழ்ந்த கோர விபத்தில் 6 பேர் பலி

இதனையடுத்து தீயணைப்புத் துறைக்கும், ஆம்புலன்ஸுக்கும் தகவல் அளித்ததன் அடிப்படையில் மீட்புப் பணியில் இறங்கினர். படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபோது 57 வயது கொண்ட பெண் ஒருவர் வழியிலேயே உயிரிழந்தார். இதனால் 5 பேர் விபத்து நடந்த நாளன்று உயிரிழந்தனர்.

அடுத்தடுத்து மோதிக்கொண்ட 7 கார்கள் : சினிமா சண்டைக் காட்சி போல் நிகழ்ந்த கோர விபத்தில் 6 பேர் பலி

இந்நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் இன்று காலை உயிரிழந்ததால் விபத்தினால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது. இதனையடுத்து ஒரே சமயத்தில் 7 கார்கள் மோதி விபத்துக்குள்ளது குறித்து புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. சினிமாவில் வருவது போன்று நடந்த இந்த கோர விபத்து அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories