தமிழ்நாடு

தமிழை கற்க கூடாது என கூற யாருக்கும் தகுதியில்லை - மயில்சாமி அண்ணாதுரை

நாளைய அறிவியல் உலகத்தில் தமிழ் மொழி சரித்திரத்தில் இடம் பெறவேண்டும் என்று இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

தமிழை கற்க கூடாது என கூற யாருக்கும் தகுதியில்லை - மயில்சாமி அண்ணாதுரை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அறிவியல் பலகை என்ற பெயரில் தமிழில் அறிவியல் மற்றும் தகவல் தொடர்பு தொடர்பான கருத்தரங்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

பின்னர் பேசிய அவர், ''புதிய கல்வி கொள்கை பற்றி நாம் பேசி வரும் நிலையில், தமிழை கற்க கூடாது என கூற யாருக்கும் உரிமையில்லை. தமிழில் படித்தும் முன்னேறினார் என தயவு செய்து கூறாதீர்கள் அது தமிழை தாழ்மை படுத்தி காட்டும்.

அறிவியல் மட்டுமே அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு முகவரியாக இருக்கும் அத்தகைய அறிவியலை நாம் தாய்மொழியில் கற்கும் போது தாய்மொழியான தமிழ் சான்றோர் அவையில் பேசப்படும். விண்வெளி ஆராய்ச்சியில் தமிழ் நிலைத்து நிற்கும். நாளைய அறிவியல் உலகத்தில் தமிழ் மொழி சரித்திரத்தில் இடம் பெறவேண்டும்'' இவ்வாறு தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories