தமிழ்நாடு

NIA-வை விமர்சித்து மெசேஜ் செய்தவர் கைது : அடக்குமுறையின் உச்சத்தில் மத்திய அரசு!

தேசிய புலனாய்வு அமைப்பு குறித்து விமர்சிக்கும் விதமாக செய்தி பகிர்ந்த முத்துப்பேட்டையைச் சேர்ந்த இஸ்லாமியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

NIA-வை விமர்சித்து மெசேஜ் செய்தவர் கைது : அடக்குமுறையின் உச்சத்தில் மத்திய அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சமீபத்தில் நடத்திய சோதனைகள் மற்றும் கைது நடவடிக்கைகள் குறித்து விமர்சிக்கும்படியாக செய்தியைப் பகிர்ந்த முத்துப்பேட்டையைச் சேர்ந்த 39 வயதான நபரை திங்கட்கிழமை முத்துப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராக இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை அமைக்க திட்டம் வகௌத்து வருவதாகக் கூறப்படும் அன்சாருல்லா பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய சிலரின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. அதன்படி, என்ஐஏ 14 பேரை கைது செய்தது.

திருவாரில் முத்துப்பேட்டையைச் சேர்ந்த தாஜ் என்கிற தாஜுதீன் (39) என்பவர் என்.ஐ.ஏ-வின் நடவடிக்கைகளை விமர்சித்து ஒரு செய்தியை வெளியிட்டார். மத்திய அரசின் உத்தரவுப்படி என்ஐஏ இஸ்லாமியர்களை குறிவைத்து வருவதாகவும், இதை எதிர்த்துக் கேள்விகேட்க ஜமாத்தில் யாரும் இல்லை எனக் குறிப்பிடும் விதமாக அவரது செய்தி இருந்துள்ளது.

முத்துப்பேட்டை வி.ஏ.ஓ தினேஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில், போலிசார் தாஜுதீன் மீது 153 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஆத்திரமூட்டல்) மற்றும் 153 (ஏ) (மத அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திங்கட்கிழமை மாலை திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தாஜுதீன், நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டார்.

banner

Related Stories

Related Stories