தமிழ்நாடு

தமிழுக்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? உணவுக்கு பதில் பெட்ரோலை குடிக்க முடியுமா? - கனிமொழி சரமாரி கேள்வி!

தமிழ் வளர்ச்சி குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சுக் தி.மு.க மக்களவை உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழுக்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? உணவுக்கு பதில் பெட்ரோலை குடிக்க முடியுமா? - கனிமொழி சரமாரி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை கிண்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ் மொழி வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செய்துள்ளதாக தெரிவித்தார்.

இதற்கு தி.மு.க. மக்களவை உறுப்பினர் கனிமொழி பதிலடி கொடுத்து, நிர்மலா சீதாராமனுக்கும் மத்திய அரசுக்கும் அடுக்கடுக்கான கேள்வியை முன்வைத்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, தமிழ் மொழி வளர்ச்சிக்காக இதுவரை மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது என்பதை பட்டியலிட முடியுமா என்று கேள்வி எழுப்பினார். அது மட்டுமில்லாமல், மத்திய அரசு கொண்டுவரும் புது திட்டங்களுக்கு ஆங்கிலத்தில் கூட பெயரை வைக்காமல் அதில் இந்தியை மட்டுமே திணித்து வருகிறது என பதிலடி கொடுத்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், உணவு பாதுகாப்பு என்பது ஒரு நாட்டுக்கு மிக அவசியம். விவசாயிகளுக்கென இருக்கும் விளை நிலங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வராதீர்கள். உணவுக்கு பதில் பெட்ரோலை குடிக்க முடியாது என பலமுறை தெரிவித்துள்ளோம் என மத்திய அரசுக்கு பதிலளித்துள்ளார்.

அதேபோல், 8 வழிச்சாலை திட்டத்தை அதிவிரைவு சாலைத் திட்டம் என பெயர் மாற்றினாலும் விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்துக்கும் தி.மு.க. ஆதரவு தெரிவிக்காது என பேசியுள்ளார்.

banner

Related Stories

Related Stories