தமிழ்நாடு

இன்னும் 3 மாதத்திற்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாது: தட்டிக் கழிக்கும் தேர்தல் ஆணையம்.. காரணம் என்ன?

உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் மூன்று மாதம் அவகாசம் கேட்டுள்ளது தமிழக தேர்தல் ஆணையம்.

இன்னும் 3 மாதத்திற்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாது: தட்டிக் கழிக்கும் தேர்தல் ஆணையம்.. காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி தி.மு.க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதே நேரம் ஜெய் சுகின் என்ற வழக்கறிஞரும் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்தது. அதில், அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை உள்ளாட்சித் தேர்தலை நடத்த இயலாது என்றும், அதன் பிறகே தேர்தலை நடத்த முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஏனெனில், தண்ணீர் தட்டுப்பாட்டில் அரசு கவனம் செலுத்தி வருவதாலும் வார்டு மறுவரை செய்வதில் தாமதம் ஏற்படும் என அவகாசம் கேட்டுள்ளது. உண்மையில் தண்ணீர் பிரச்னையை சரிசெய்வதில் இதுவரை தமிழக அரசு எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே நிதர்சனம்.

2016ல் நடக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் பல்வேறு காரணங்களை மேற்கோள் காட்டி தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் இன்றளவும் ஒத்திவைத்துள்ளது. இதற்கிடையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

தற்போது அக்டோபர் மாதத்துக்கு பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆகையால், அடுத்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்காகவே அதிமுக அரசு திட்டமிட்டு வருகிறதா அல்லது தேர்தல் நடத்தினால் தோல்வியையே தாங்கள் பெறுவோம் என்ற பயத்தினால் நடத்தாமலே இருக்குமா என்று கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories