தமிழ்நாடு

தெருவோரம் வசிக்கும் மக்களுக்கு இந்த அரசு எப்போது வீடு ஒதுக்கீடு செய்யும்- சேகர்பாபு கேள்வி

3 ஆண்டுகளாக சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு வீடு கட்டித்தரச் சொல்லி வலியுறுத்தி வருகிறேன். அதன் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என பேரவையில் திமுக எம்.எல்.ஏ. சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.

தெருவோரம் வசிக்கும் மக்களுக்கு இந்த அரசு எப்போது வீடு ஒதுக்கீடு செய்யும்- சேகர்பாபு கேள்வி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில், துறைமுகத் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு, சாலையோரம் வசித்துவரும் ஏழை மக்களுக்கு எப்போது வீடு கட்டித் தரப்படும் என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது அவர் பேசுகையில், “தெருவோரம் வசிக்கும் ஏழை மக்களுக்கு வீடு கட்டித் தரவேண்டும் என கடந்த 2016ம் ஆண்டு நடந்த பேரவையின் போது வலியுறுத்தியிருந்தேன்.சென்னையில் சாலையோரம் வசிப்பவர்கள் காலைக்கடன்களை கழிப்பதற்கு கூட ஏதுவான இடமில்லாமல் திண்டாடி வருகின்றனர். அதிலும் பெண்களின் நிலையை கருத்தில் கொண்டாவது போர்க்கால அடிப்படையில் அவர்களுக்கு வீடுகளை ஒதுக்கித்தர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “3 ஆண்டுகளாக வலியுறுத்தியும், அது குறித்து இன்றளவும் எது மாதிரியாத நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும், எப்போது வீடுகளை கட்டித்தருவீர்கள்” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், “சாலை ஓரம் வசிக்கும் மக்களுக்கு வீடு கட்டித் தரப்படும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. விரைவில் அவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories