தமிழ்நாடு

இன்று சட்டப்பேரவை: தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்டபல பிரச்னைகளை எழுப்ப தயார் நிலையில் தி.மு.க

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று கூடும் நிலையில் தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் பல்வேறு பிரச்னைகளை எழுப்புவதற்கு தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இன்று சட்டப்பேரவை: தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்டபல பிரச்னைகளை எழுப்ப தயார் நிலையில் தி.மு.க
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அப்போது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறாமல் தமிழக சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

அதையடுத்து தற்பொழுது மானியக் கோரிக்கைக்கானவிவாதம் நடைபெற 28ம் தேதி கூடியது, அப்போது சபாநாயகர் தனபால், இரங்கல் தீர்மானம் வாசித்தார்.இதன்பிறகு சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், 2 நாள் விடுமுறை முடிந்ததும் இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடுகிறது. இன்றையதினம் தினம் நடைபெறும் கூட்டத்தில், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் மீதான விவாதம் நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கருப்பண்ணன் ஆகியோர் உறுப்பினர்களின் விவாதத்துக்கு பதில் அளித்து பேசுகின்றனர்.

ஆனால் தமிழகத்தில் தற்பொழுது நிலவும் பிரச்னை தட்டுப்பாடு, வறட்சி குறித்து பிரச்சனை விவதாத்திற்கு கொண்டுவர திமுக முன்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடிநீர் பிரச்னை தவிர தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு, 7 தமிழர்கள் விடுதலை மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நீதிமன்றம் சென்றது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்புவதற்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இன்று சட்டப்பேரவை: தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்டபல பிரச்னைகளை எழுப்ப தயார் நிலையில் தி.மு.க

சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடும் கடும் குடிநீர் பிரச்னை குறித்து பிரச்னை எழுப்படும் என்று தெரிகிறது. தமிழக அரசு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காததுதான் குடிநீர் பிரச்னைக்கு இவ்வளவு பெரிய காரணம் என்று தி.மு.க சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.

குடிநீர் பிரச்னை தவிர தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு, 7 தமிழர்கள் விடுதலை மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நீதிமன்றம் சென்றது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்புவதற்கும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

banner

Related Stories

Related Stories