தமிழ்நாடு

தங்கத்தின் விலையை முறியடிக்கும் தண்ணீர் விலை... நாடாளுமன்றத்தில் டி.கே.ரங்கராஜன் வருத்தம்!

குடிநீர் பிரச்னை தமிழகமெங்கும் தலைதூக்கியுள்ள நிலையில் சென்னையில் தண்ணீரின் விலை தங்கத்தின் விலையை முறியடிக்கும் வகையில் உள்ளது என மார்க்சிஸ்ட் எம்.பி. டி.கே. ரங்கராஜன் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.

தங்கத்தின் விலையை முறியடிக்கும் தண்ணீர் விலை... நாடாளுமன்றத்தில் டி.கே.ரங்கராஜன் வருத்தம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்து மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது சி.பி.எம். உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பேசினார்.

அப்போது, தமிழகத்தின் பெருநகரமாக உள்ள சென்னையில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்களின் பயன்பாட்டுக்கு தனியார் லாரிகள் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீரையே நம்பி உள்ளனர்.

பொதுவாக தங்கத்தின் விலையே எப்போதும் உயர்ந்து இருக்கும். ஆனால் தற்போது நிலவும் தட்டுப்பாட்டை பயன்படுத்தி பல தனியார் நிறுவனங்கள் ஏகபோக விலைக்கு தண்ணீரை விற்று வருகின்றனர். தண்ணீரின் விலை தங்கத்தின் விலையை முறியடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல், குடிநீர் பிரச்னையால் ஐ.டி. நிறுவனங்களும், பல்வேறு ஹோட்டல்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஐ.டி. நிறுவனங்கள் தத்தம் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரியும்படியும் அறிவுறுத்தியுள்ளன.

இந்த நிலை நீடிக்காமல் தடுக்கும் வகையில், அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு தேவையான நீரைப் பெற்று தர வேண்டும் என மத்திய அரசை டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தினார்.

banner

Related Stories

Related Stories