தமிழ்நாடு

மாணவர்கள் இல்லாவிட்டால் கல்லூரிகளை மூட வேண்டியதுதான் : கல்வி அமைச்சரின் அலட்சிய பதில் !

மாணவர் சேர்க்கை இல்லாத பொறியியல் கல்லூரிகளை மூடுவதை தவிர வேறு வழி இல்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் இல்லாவிட்டால் கல்லூரிகளை மூட வேண்டியதுதான் : கல்வி அமைச்சரின் அலட்சிய பதில் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

2019-2020ம் கல்வியாண்டு பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. இதனை தொடங்கி வைத்த உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், ''பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைன் முறையில் ஜூலை 3ம் தேதி தொடங்க உள்ளது. நடப்பாண்டில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களில், 47 ஆயிரம் பேர் முதல் தலைமுறை பட்டதாரி ஆவர்.141 மாற்றுத் திறனாளிகள் மட்டுமே இம்முறை விண்ணப்பித்துள்ளனர். மாணவர் சேர்க்கை இல்லாத கல்லூரிகளை மூடுவதை தவிர வேறு வழி இல்லை'' என அவர் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories