தமிழ்நாடு

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு : 596 கி.மீ மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்!

ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பேரழிவுத் திட்டங்களை எதிர்த்து 596 கிலோ மீட்டருக்கு மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு அனைத்துக் கட்சியினர் கலந்துகொண்டனர்.

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு : 596 கி.மீ மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகம் மற்றும் புதுவையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 244 இடங்களில் ஆய்வு மேற்கொண்டு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. விழுப்புரம் முதல் புதுச்சேரி வரை 1,794 சதுர கிலோ மீட்டர் தூரம் கிணறுகள் தோண்டப்பட இருக்கின்றன.

மேலும் மக்களின் எதிர்ப்பை மீறி, நடவு முடிந்த சில நாட்களேயான வயல்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணியை ஓ.என்.ஜி.சி செய்து வருகிறது. திருவாரூர்மாவட்டத்தில் 5 ஒன்றியங்களிலும், 16 ஊராட்சிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி தீவிரம் காட்டி வருகிறது.

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு : 596 கி.மீ மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்!

இதனால் "ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பேரழிவுத் திட்டங்களை எதிர்த்தும், தமிழக விவசாயிகளின் உரிமையை மீட்டு - விளைநிலங்களை காக்கவும் வலியுறுத்தி நம்மாழ்வாரால் தொடங்கப்பட்ட ‘பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம்” சார்பில் மனித சங்கிலிப் போராட்டம் நடத்த அறைகூவல் விடுத்தது.

அதன் அடிப்படையில், ’பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம்’ சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் வரை 596 கிலோ மீட்டருக்கு மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக இந்த போராட்டத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு அளித்து அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துக் கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் ஏரளமான தி.மு.கவினர் மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு : 596 கி.மீ மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்!

மேலும் இந்த போராட்டத்திற்கு ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ, சிபிஐ(எம்) மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மனித சங்கிலி போராட்டத்தில் மரக்காணத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, தி.மு.க மாவட்ட செயலாளர்கள் பொன்முடி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த மனிதசங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

banner

Related Stories

Related Stories