தமிழ்நாடு

தனியார் பள்ளிகள் கல்விகட்டணத்தை இணையத்தில் வெளியிடவேண்டும்: 1 மாதம் கேடுவிதித்த நீதிமன்றம்

தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் நடப்பாண்டு வசூலிக்கும் கல்விக் கண்டனத்தை இணையதளத்தில் ஒரு மாதத்தில் வெளியிடவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தனியார் பள்ளிகள் கல்விகட்டணத்தை இணையத்தில் வெளியிடவேண்டும்: 1 மாதம் கேடுவிதித்த நீதிமன்றம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் பல மடங்கு அதிகரித்து விட்டதாக சமீபத்தில் புகார் எழுந்தது. சென்னை போன்ற நகரங்களில் சில தனியார் பள்ளிகளில் கட்டணம் தாமதமாக செலுத்தும் பெற்றோர்களிடம் கந்து வட்டி முறையில் பணம் வசூல் செய்வதாகவும் இதனை தடுக்க வலியுறுத்தி போராட்டமும் நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள பல தனியார் பள்ளிகளில் இதே நிலைமை நீடித்து வருகிறது. இந்நிலையில் மதுரையை சேர்ந்த ஆர்.டி.ஐ.ரஹிம் என்பவர் பொதுநலன் மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தார்,

அந்த மனுவில் அவர் தெரிவித்ததாவது, "கடந்த 2017 -2018ம் கல்வி ஆண்டிற்கான தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை தமிழக பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக்குழு நிர்ணயம் செய்தது.

அதன் பிறகு 2018 -2021ம் ஆண்டுகளுக்கான தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டணத்தை இதுவரை தமிழக பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக்குழு நிர்ணயம் செய்யவில்லை. இதனால் தமிழகத்தில் இயங்கி வரும் 7600 தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் அரசு முன்பு நிர்ணயம் செய்த கல்விக் கட்டணத்தை விட அதிகமாக வசூலித்து வருகின்றார்.

எனவே 2018–2021ம் ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தமிழக பள்ளிகள் கல்விக்கட்டண நிர்ணய குழுவிற்கு உத்தரவிட வேண்டும். என இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இதனையடுத்து இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. "அப்போது அரசு வழக்கறிஞர் ஆஜராகி 2018 - 2021ம் ஆண்டுகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட கல்விக்கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிட 3 மாதம் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.

பின்னர் தீர்ப்பளித்த நீதிபதிகள் ஒரு மாதம் மட்டுமே கால அவகாசம் வழங்கமுடியும். அதற்க்கு கல்விக்கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும்“ என்று உத்தரவிட்டனர்.

banner

Related Stories

Related Stories