தமிழ்நாடு

தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க தமிழகம் முழுவதும் யாகம் செய்ய முடிவு : அ.தி.மு.க அறிவிப்பு

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை தொடர்பாக தி.மு.க. நாளை போராட்டம் நடத்தவுள்ள நிலையில், யாகம் வளர்க்க உள்ளதாக அ.தி.மு.க தலைமை அறிவித்துள்ளது.

தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க தமிழகம் முழுவதும் யாகம் செய்ய முடிவு : அ.தி.மு.க அறிவிப்பு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழகத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக, தலைநகர் சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் மழை வேண்டி அனைத்து அமைச்சர்களும் அந்தந்த மாவட்டங்களில் நாளை யாகம் வளர்க்க அ.தி.மு.க. தலைமை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள கோயில்களில் மழை வேண்டி யாகம் நடத்த வேண்டும். இந்த யாகங்களில் மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கோயில்களில் நாளை நடைபெறும் யாகத்தில் முதல்வரும், துணை முதல்வரும் பங்கேற்க உள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. குடிநீர் பிரச்சனை தொடர்பாக தி.மு.க நாளை போராட்டம் நடத்தவுள்ள நிலையில், யாகம் வளர்க்க அ.தி.மு.க அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories