தமிழ்நாடு

தமிழகத்தின் 15வது மாநகராட்சியானது ஆவடி... அரசாணை வெளியிட்டது தமிழக அரசு...

ஆவடி நகராட்சியை தமிழகத்தின் 15வது மாநகராட்சியாக அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

தமிழகத்தின் 15வது மாநகராட்சியானது ஆவடி... அரசாணை வெளியிட்டது தமிழக அரசு...
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடியை நகராட்சியை, மாநகராட்சியாக தரம்ம் உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குள் பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகளும், திருநின்றவூர் பேரூராட்சியும், நெமிலிச்சேரி, காட்டுப்பாக்கம், நசரத்பேட்டை உள்ளிட்ட 11 கிராம பஞ்சாயத்துகளும் உள்ளடங்கும்.

மேலும், அடிப்படை தேவைகளான குடிநீர், கழிவுநீர் கால்வாய், சாலை போன்றவை தரம் உயரும். அதேபோல், தண்ணீர், சொத்து வரி விதிப்புகளும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

ஏற்கெனவே, தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, சேலம், திருப்பூர், ஈரோடு, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், ஓசூர், நாகர்கோவில், கோவை, தூத்துக்குடி என 14 மாநகராட்சிகள் உள்ள நிலையில், தற்போது வந்துள்ள அரசாணைப்படி ஆவடி 15வது மாநகராட்சியாகும்.

banner

Related Stories

Related Stories