தமிழ்நாடு

நீட் தேர்வில் தோல்வி: தமிழகத்தில் மேலும் ஒரு மாணவர் பலி!

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தமிழகத்தில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்திருப்பது பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நீட் தேர்வில் தோல்வி: தமிழகத்தில் மேலும் ஒரு மாணவர் பலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வு எழுதுவதை மத்திய பா.ஜ.க. அரசு கட்டாயமாக்கியது. இதனால் நாடு முழுவதும் நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியதில் மொத்தம் 10 பேருக்கு மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்வதற்கு தேர்வாகியுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளிவந்தன.

இதற்கிடையில், நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் புதுக்கோட்டையைச் சேர்ந்த வைசியா, திருப்பூரைச் சேர்ந்த ரிதுஸ்ரீ, விழுப்புரத்தைச் சேர்ந்த மோனிஷா ஆகிய மாணவிகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

நீட் தேர்வு தோல்வியால் மனமுடைந்த மாணவிகளின் உயிரிழந்ததற்கான வடுக்கள் மறையும் முன்னரே சேலம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த பரத்பிரியன் என்ற மாணவர் நீட் தேர்வில் வெறும் 111 மதிப்பெண் பெற்றதால் தன்னுடைய மருத்துவர் கனவு சிதைந்ததாக எண்ணி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளான்.

தற்போது இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றளவும் பல்வேறு வகையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதை எவற்றையும் அரசு கண்டும் காணாமல் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories