தமிழ்நாடு

குரூப்-4 தேர்வுக்கான விவரங்கள் வெளியீடு : விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 14 !

குரூப் - 4 மற்றும் வி.ஏ.ஓ தேர்வுகளுக்கான அறிவிப்பினை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது.

குரூப்-4 தேர்வுக்கான விவரங்கள் வெளியீடு : விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 14 !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-4 பணியிடங்களுக்கான முழு அறிவிப்பாணையை இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, 6,491 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு 397 காலியிடங்களும், ஜுனியர் அசிஸ்டண்ட் பணிக்கு 2792 காலியிடங்களும், பில் கலெக்ட்டர் பணிக்கு 34 காலியிடங்களும், சர்வேயர் பணிக்கு 509 காலியிடங்களும், வரைவாளர் பணிக்கு 74 காலியிடங்களும், தட்டச்சர் பணிக்கு 1901 காலியிடங்களும், ஸ்டெனோகிராஃபர் பணிக்கு 784 காலியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.7.2019ம் தேதியின்படி பொதுப்பிரிவினர் 30 வயதுக்குள்ளும், ஆதி திராவிடர் வகுப்பினர், பழங்குடியினர் வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 40 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in எனும் இணையதளத்தில் அறியலாம். குரூப் - 4 தேர்விற்கு விண்ணப்பிக்க ஜூலை 14ம் தேதி கடைசி நாளாகும். மேலும், இடைத்தரகர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் டி.என்.பி.எஸ்.சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

banner

Related Stories

Related Stories