தமிழ்நாடு

எய்ம்ஸ்: நிலம் ஒதுக்காத அ.தி.மு.க அரசு; நிதி வழங்காத பா.ஜ.க அரசு; ஆர்.டி.ஐ. மூலம் அம்பலம்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், தற்போது வரை அதற்கான நிலங்களை அ.தி.மு.க அரசு ஒதுக்கவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது

 எய்ம்ஸ்: நிலம் ஒதுக்காத அ.தி.மு.க அரசு; நிதி வழங்காத பா.ஜ.க அரசு; ஆர்.டி.ஐ. மூலம் அம்பலம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரை தோப்பூரில், ரூ.1,264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான எந்த ஒரு தொடக்கப்பணியும் தொடங்கப்படவில்லை.

இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. அதில், தமிழகத்தில் எய்ம்ஸ் அமைப்பதற்காக நிலம் ஒதுக்கப்படவில்லை என அதிர்ச்சி தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

அதேச்சமயத்தில், இத்திட்டத்துக்காக 1,264 கோடி ரூபாய் நிதி அறிவிக்கப்பட்டும், வெறும் 5 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலம் ஒதுக்காமல் தமிழக அ.தி.மு.க அரசும், நிதி வழங்காமல் மத்திய பா.ஜ.க அரசும் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தில் அலட்சியம் போக்கை கடைபிடித்து வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் மத்திய பா.ஜ.க அரசும் மவுனம் சாதித்து வருவதால், தேர்தல் ஆதாயத்துக்காக அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories