தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குச்சாவடிகள் அமைப்பு? வரைவுப்பட்டியல் தயார் செய்யும் பணிதீவிரம்

உள்ளாட்சி தேர்தலுக்காக சென்னை மாநராட்சியில் 5,720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குச்சாவடிகள் அமைப்பு? வரைவுப்பட்டியல் தயார் செய்யும் பணிதீவிரம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடைசியாக 2016ம் ஆண்டுக்கு முன்பு நடத்தப்பட்டது. நான்கு ஆண்டுக்களுக்கு மேலாக தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை நடத்த நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் மாதம் இறுதியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த இருப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

அதன் அடிப்படையில், தற்பொழுது உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஆகஸ்ட் இறுதியில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, "சென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கும் மொத்தம் 5,720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இது தொடர்பான வரைவு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆண் வாக்காளர்களுக்காக 78 வாக்குச்சாவடிகளும், பெண் வாக்காளர்களுக்காக 78 வாக்குச்சாவடிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்காளர்களுக்கும் சேர்த்து 5,564 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வரும் 10-ம் தேதி பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.

இதனை மாநகராட்சி ஆணையர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வையிடலாம் என்று ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories