தமிழ்நாடு

“அ.தி.மு.க ஆட்சியில் ஏரிகளுக்கும் பாதுகாப்பு இல்லை” - கனிமொழி எம்.பி

அ.தி.மு.க ஆட்சியால் விவசாய நிலங்களுக்கு மட்டுமல்ல; ஏரிகளுக்கும் கூட பாதுகாப்பு இல்லை என விமர்சித்துள்ளார் கனிமொழி எம்.பி.

“அ.தி.மு.க ஆட்சியில் ஏரிகளுக்கும் பாதுகாப்பு இல்லை” - கனிமொழி எம்.பி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அ.தி.மு.க ஆட்சியால் விவசாய நிலங்களுக்கு மட்டுமல்ல ஏரிகளுக்கும் கூட பாதுகாப்பு இல்லை என விமர்சித்துள்ளார் கனிமொழி எம்.பி.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பொய்த்துப்போன நிலையில், நீர்நிலைகள் வறண்டுபோய்க் காணப்படுகின்றன. ஏரிகளில் தண்ணீர் இல்லாததால் மக்கள் இந்த வருடம் பெரும் குடிநீர் பற்றாக்குறையால் தவித்து வருகின்றனர்.

குறிப்பாக, தலைநகர் சென்னையில் வரலாறு காணாத அளவில் பெரும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் கல்குவாரிகளில் தேங்கியுள்ள நீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், கடும் குடிநீர் பற்றாக்குறை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி. அதோடு அதுகுறித்த வீடியோ ஒன்றையும் பதிவோடு இணைத்துள்ளார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது :

“அ.தி.மு.க ஆட்சியில் விவசாய நிலங்களுக்கு மட்டுமல்ல ஏரிகளுக்கும் கூட பாதுகாப்பு இல்லை. பாதுகாக்க வேண்டிய காவல்துறை, ஏரியின் ஒரு பகுதியை மூடி காவல் நிலையம் கட்டுகிறது. சோழிங்கநல்லூர் (சென்னை) ஏரி பாதுகாக்கபட வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories