தமிழ்நாடு

அறப்போர் இயக்கத்திற்கு எதிராக அமைச்சர் வேலுமணி தொடர்ந்த மான நஷ்ட வழக்கு தள்ளுபடி!

அமைச்சர் வேலுமணிக்கு எதிராக கருத்துகள் தெரிவிக்க அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க கோரி மான நஷ்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் விட்டுள்ளது.

அறப்போர் இயக்கத்திற்கு எதிராக அமைச்சர் வேலுமணி தொடர்ந்த மான நஷ்ட வழக்கு தள்ளுபடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்கட்டமைப்பு பணிகளை தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு அவர்களின் நிறுவனங்களுக்கு வழங்கியதன் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்தியதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது.

இந்நிலையில், தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை பரப்ப அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க கோரி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தொடர்ந்து தனக்கு எதிராக பேசி வரும் அறப்போர் இயக்கம் ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தது. அமைச்சர் வேலுமணி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்துப் பேச அறப்போர் இயக்கத்துக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த அவர், அதேபோல 9 கட்டுமான ஒப்பந்த நிறுவனங்கள் தொடர்ந்த மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

banner

Related Stories

Related Stories