தமிழ்நாடு

காவிரி விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற வேண்டும் : பணியைத் தொடங்கினார் நாகை எம்.பி

உச்சநீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும் என ஆணைய தலைவரிடம் நேரில் சென்று நாகை மாவட்ட எம்.பி செல்வராஜ் மனு அளித்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற வேண்டும் : பணியைத் தொடங்கினார் நாகை எம்.பி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழக மக்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூன்றாவது கூட்டம் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில் இன்று நடைபெற்றது. ஆணைய கூட்டத்தில் தமிழக, கர்நாடக பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மே மாதம் முடிவதற்குள் கர்நாடக அரசு காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், குறுவை சாகுபடிக்கு ஏதுவாக ஜூன் மாதத்தில் 9.19 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதுகுறித்து காவிரி மேலாண்மைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, காவிரியிலிருந்து தமிழகத்திற்கு உடனடியாக 9.19 டிஎம்சி தண்ணீர் திறக்குமாறு காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

காவிரி விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற வேண்டும் : பணியைத் தொடங்கினார் நாகை எம்.பி

இதனிடையே தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்ட எம்.பி செல்வராஜ் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்திற்கு நேரடியாக சென்று மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன் சந்தித்து காவிரி நீரை திறக்க கோரிக்கை மனு அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அவர் கூறுகையில், “உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்கான தண்ணீரை திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும். குறுவை சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஆணையத்தின் தலைவரிடம் வலியுறுத்தியுள்ளேன்” என்று தெரிவித்தார்.

மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கையை ஏற்று கர்நாடக மாநில அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories