தமிழ்நாடு

5வது நாளாக உயரும் பெட்ரோல், டீசல் விலை! கண்டுகொள்ளாத பா.ஜ.க அரசு என மக்கள் குற்றச்சாட்டு!

தேர்தல் முடிந்ததை அடுத்து, பெட்ரோல், டீசல் விலை 5வது நாளாக அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

5வது நாளாக உயரும் பெட்ரோல், டீசல் விலை! கண்டுகொள்ளாத பா.ஜ.க அரசு என மக்கள் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சர்வதேச கச்சா எண்ணியின் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் மாற்றம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 2 மாதங்களாக நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரங்கள், வாக்குப்பதிவுகள் என நடைபெற்றதால் பெட்ரோல், டீசல் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏதும் செய்யப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், கடந்த மே 23 அன்று தேர்தல் முடிவுகள் வெளிவந்ததை அடுத்து, பெட்ரோல், டீசல் மீதான விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்த தொடங்கியுள்ளன. இன்றோடு 5வது நாளாக பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் உயர்ந்து, ரூ.74.54க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.47 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

எரிபொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்தியில் உள்ள பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை தாண்டினாலும் கூட ஆச்சர்யபடுவதற்கு இல்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories