தமிழ்நாடு

குரங்கின் தாகத்தை போக்கிய டிராஃபிக் போலீஸ்: வாக்கு எண்ணிக்கையின் போது நெகிழ்ச்சி!

சென்னையில் வாக்கு எண்ணிகையின் போது வாகன நிறுத்துமிடத்தில் குரங்கு ஒன்றிற்கு போக்குவரத்து போலீசார் ஒருவர் தண்ணீர் கொடுக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

குரங்கின் தாகத்தை போக்கிய டிராஃபிக் போலீஸ்: வாக்கு எண்ணிக்கையின் போது நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக வட தமிழகமான சென்னையில் அனல் காற்று வீசி மக்களை பாடாய்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 45 மையங்களில் நடைபெற்றது. அதில் அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரி கல்லூரி மற்றும் லயோலா கல்லூரி என சென்னையில் மட்டும் 3 மையங்களில் எண்ணப்பட்டன.

அப்போது தென் சென்னைக்கான வாக்குகள் எண்ணுவதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் மையம் அமைக்கப்பட்டிருந்தது. அப்போது, வாக்கும் எண்ணும் பணிக்காக வந்திருந்த அதிகாரிகள் வாகனங்கள் அனைத்தும் பல்கலைக்கழகத்துக்கு எதிரே உள்ள காந்தி மண்டபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

வாக்கு எண்ணிக்கையின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார் அடையாறு போக்குவரத்து தலைமைக் காவலர் சுந்தர். அப்போது, காந்தி மண்டபத்தில் உள்ள வாகன நிறுத்தமிடத்தில், தாகத்தில் இருந்த குரங்கு ஒன்றுக்கு தன்னிடம் இருந்த தண்ணீரை ஊட்டிவிட்டுள்ளார் அந்த காவலர்.

இரக்கம் மிகுந்த இது போன்ற காவல் துறையினர்களால்தான் மக்களுக்கு இன்றளவும் காவல்துறை மீதான நம்பிக்கை குறையாமல் இருக்கிறது.

கோடை காலத்தில் மனிதர்கள், தங்களின் தண்ணீர் தாகத்தை போக்கிக்கொள்ள ஆங்காங்கே கிடைக்கும் குளிர்பாணங்கள், குடிதண்ணீரை காசு கொடுத்து வாங்கிக் கொள்ளாலாம். ஆனால் இது போன்ற வாயில்லா ஜீவன்களுக்கும் தண்ணீர் தேவை ஏற்படும் என்பதை மக்களான நாமும், அரசும் அறிய வேண்டும் என்பதை இந்த புகைப்படத்தின் மூலம் உணர்த்தியுள்ளார் போக்குவரத்து காவலர் சுந்தர்.

banner

Related Stories

Related Stories