தமிழ்நாடு

காவிரியில் இருந்து 9.2 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிட வேண்டும்: - தமிழகம் வலியுறுத்தல்

டெல்டா பாசனத்துக்கு காவிரியில் தமிழகத்திற்குத் திறந்துவிட வேண்டிய 9.2 டி.எம்.சி தண்ணீரை ஜூன் 1ம் தேதி முதல் கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்று தமிழகம் வலியுறுத்தியுள்ளது

காவிரியில் இருந்து 9.2 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிட வேண்டும்: - தமிழகம் வலியுறுத்தல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் 6 மாதங்களுக்கு பிறகு நேற்று நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, காவிரி மேலாண்மை கூட்டம், வருகிற மே 28ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், காவிரி நதி நீரை பங்கீடுவது சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்துகொள்வதற்காக, காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது.

காவிரி மேலாண்மை வாரியம் கடைசியாக, 2018 டிசம்பர் மாதம் 3ம் தேதி கூடி ஆலோசனை நடத்தியது. அதேபோல், ஒழுங்காற்றுக் குழு கூட்டம், ஆகஸ்ட் 9ம் தேதி நடைபெற்றது.

காவிரியில் இருந்து 9.2 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிட வேண்டும்: - தமிழகம் வலியுறுத்தல்

இதனைத்தொடர்ந்து டெல்லியில் மத்திய நீர் ஆணையத்தின் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவின் தலைவர் நவீன் குமார் தலைமை வகித்தார்.

காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டத்தில் காவிரியில் தமிழகத்திற்குத் திறந்துவிட வேண்டிய 9 புள்ளி 2 டி.எம்.சி தண்ணீரை ஜூன் 1ம் தேதி முதல் கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்று தமிழகம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், காவிரி நீர் தொடர்பான தங்களது தரப்பு புள்ளி விவரங்களை சமர்ப்பித்தனர். தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையை, ஜூன் 12ஆம் தேதி திறக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், ஆனால், அதுகுறித்து காவிரி மேலாண்மை ஆணையம் எந்த உத்தரவையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

banner

Related Stories

Related Stories