தமிழ்நாடு

பா.ஜ.க வேட்பாளர்கள் தமிழிசை, ஹெச்.ராஜா பின்னடைவு!

பா.ஜ.க சார்பில் போட்டியிடும் ஹெச்.ராஜா மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடும் தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

பா.ஜ.க வேட்பாளர்கள் தமிழிசை, ஹெச்.ராஜா பின்னடைவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

17-வது மக்களவை தேர்தல் ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் வேலூர் தவிர்த்து 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக இருந்த 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது.

கடந்த 19-ந் தேதியுடன் தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இந்நிலையில் நாடு முழுவதும் அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களிலும் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

தமிழகத்தில் தற்பொழுது தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. திமுக கூட்டணி சற்று முன்பாக வந்த நிலவரப்படி 34 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

சிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் ஹெச்.ராஜா பின்னடைவை சந்தித்து உள்ளார்.

இதேபோல் தூத்துக்குடியில் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை பின்னடைவை சந்தித்துள்ளார். அங்கு தி.மு.கவேட்பாளர் கனிமொழி முன்னிலை வகிக்கிறார்.

banner

Related Stories

Related Stories