தமிழ்நாடு

சத்யபிரதா சாஹூ அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! 

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஜூவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததால் பரபரப்பு நிலவியது.

சத்யபிரதா சாஹூ அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலுக்கு தலைமை ஏற்றிருந்தவர் சத்ய பிரதா சாஹூ.

இதனையடுத்து தேர்தல் பணிகள் முடிவடைந்த நிலையில், மே 23ம் தேதி நடைபெற இருக்கும் வாக்கு எண்ணிக்கை பணிக்கான முன்னேற்பாடுகள் குறித்து, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் வீடியோ கான்ஃப்ரன்ஸிங் மூலம் கலந்துகொண்டார் சத்ய பிரதா சாஹூ.

அந்த சமயத்தில், அவரது அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்க இருப்பதாக மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் மோப்ப நாயின் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.

மிரட்டல் சம்பவத்தை அடுத்து தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories