தமிழ்நாடு

5 நாட்கள் விநியோகம் செய்ய மட்டுமே குடிநீர் உள்ளது - கைவிரித்த சென்னை மெட்ரோ! 

சென்னையின் முக்கிய நீராதாரமான புழல், பூண்டி ஏரிகளில் இருந்து குறைந்த அளவு மட்டுமே நீர் திறக்கப்படுகிறது. மற்ற ஏரிகளும் வறண்டுள்ளதால், நீர் திறக்கப்படவில்லை

5 நாட்கள் விநியோகம் செய்ய மட்டுமே குடிநீர் உள்ளது - கைவிரித்த சென்னை மெட்ரோ! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்த ஆண்டு பருவ மழை குறைந்ததாலும், கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருப்பதாலும், சென்னையின் நீர் ஆதாராங்கள் வறண்டுள்ளன. இதனால், சென்னைக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே குடி நீர் விநியோகம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சென்னையின் முக்கிய நீராதாரமான புழல், பூண்டி ஏரிகளில் இருந்து குறைந்த அளவு மட்டுமே நீர் திறக்கப்படுகிறது. மற்ற ஏரிகளும் வறண்டுள்ளதால், நீர் திறக்கப்படவில்லை. கண்டலேறு அணையில் இருந்து நீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், ஆந்திர அரசு வெறும் 392 மில்லியன் கன அடி நீரை மட்டுமே வெளியேற்றி கைவிரித்துவிட்டது.

இதனால் சென்னைக்கான நீர் ஆதாரங்களில் இருக்கும் நீரைக் கொண்டு இன்னும் 5 நாட்களுக்கு மட்டுமே நீர் விநியோகம் செய்யப்படும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

5 நாட்களுக்கு பிறகு சென்னையில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்

இன்னும் 5 நாட்களுக்கு மட்டுமே சென்னையில் குடிநீர் விநியோகம்! - வறண்டு போன நீர் ஆதாரங்களால் சிக்கல் #waterscarcity #chennai

Posted by Kalaignar Seithigal on Friday, May 17, 2019

தனிப்பட்ட முறையில் பயன்பாட்டுக்காகவும் குடிநீர் விநியோகம் செய்கிறது மெட்ரோ குடிநீர் வாரியம். 6000 லிட்டர் லாரி தண்ணீர் 475 ரூபாய்க்கும், 12,000 லிட்டர் லாரி தண்ணீர் 1,500 ரூபாயும் என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் செலுத்தி லாரி நீரை புக் செய்தாலும், 12 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்கிறது மெட்ரோ குடிநீர் வாரியம்.

கோடை காலம் முடிய இன்னும் பல வாரங்கள் இருக்கும் நிலையில், இப்போதே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, மக்களை கவலையடையச் செய்துள்ளது.

banner

Related Stories

Related Stories