தமிழ்நாடு

6 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி இல்லை - தமிழ்நாட்டில் பொறியியல் கல்வியின் நிலை!

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா உறுதியளித்துள்ளார்.

 6 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி இல்லை - தமிழ்நாட்டில் பொறியியல் கல்வியின் நிலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கிண்டி பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டதின் 225வது விழாவையொட்டி அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா புகைப்படக்கண்காட்சியை தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “ஆறு கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்வாகாத விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகம் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது எனவும், மாணவர்களே தங்கள் படிப்பு மேல் அக்கறை எடுத்து படிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

92 கல்லூரிகளில் 300 பாடபிரிவுகள் மூடப்பட்ட விவகாரத்தில் கல்லூரிகளின் பெயர்களை வெளியிடாதது சமூகத்தில் எதிர்மறையான எண்ணத்தை உருவாக்கும் என்பதால் தான் வெளியிடவில்லை என பதிலளித்தார்.

மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

அதோடு அண்ணா பல்கலைக்கழகம் வழங்கி வந்த "வேளாண் மற்றும் நீர் பாசனம்" பொறியியல் பட்ட படிப்பு தற்காலிகமாக இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை இல்லை என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories